Thursday, February 13, 2025
Homeசினிமாஎன் மகளுக்கு Autism இல்லை, அவளுக்கு அந்த பிரச்சனை தான் உள்ளது- சீரியல் நடிகர் அமித்...

என் மகளுக்கு Autism இல்லை, அவளுக்கு அந்த பிரச்சனை தான் உள்ளது- சீரியல் நடிகர் அமித் பார்கவ்


அமித் பார்கவ்

கன்னடத்தில் 2010ம் ஆண்டு சீதே தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் அமித் பார்கவ்.

பின் தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்திருந்தார்.

இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதை வென்ற அமித் பார்கவ் அடுத்து நெஞ்சம் மறப்பதில்லை, மாப்பிள்ளை போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.

கடைசியாக அவர் நடித்த தொடர் என்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த திருமதி ஹிட்லர் தான்.

வெள்ளித்திரையிலும் என்னை அறிந்தால், எனக்குள் ஒருவன், மிருதன், குற்றம் 23, சார்லி சாப்ளின் 2, சக்ரா, அரண்மனை 3, மாருதி நகர் காவல் நிலையம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

என் மகளுக்கு Autism இல்லை, அவளுக்கு அந்த பிரச்சனை தான் உள்ளது- சீரியல் நடிகர் அமித் பார்கவ் | Serial Actor Amit Bhargav About Daughter Health


நடிகரின் பேட்டி

தற்போது தனது மனைவி சிவரஞ்சனியுடன் Mr&Mrs சின்னத்திரையில் கலந்துகொண்டிருக்கிறார். இவர் அண்மையில் தனது மகள் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், என்னுடைய மகளுக்கு ஆட்டிசம் மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பிரச்சனை எல்லாம் கிடையாது.

இதை நாங்கள் மருத்துவமனையிலும் பரிசோதித்து விட்டோம், என்னுடைய மகளுக்கு Echolalia என்ற பிரச்சனை இருக்கிறது.

இது நாம் சொல்லும் சில விஷயத்தை சீக்கிரமாகவே புரிந்து கொள்ள முடியாது.

அவ்வளவுதான் மற்றபடி என் மகள் நன்றாகத்தான் இருக்கிறார் என கூறியுள்ளார், அவரது பேட்டியை கண்ட ரசிகர்கள் உங்களது மகள் சீக்கிரமே குணமடைந்து விடுவார் என கமெண்ட் செய்கிறார்கள். 

என் மகளுக்கு Autism இல்லை, அவளுக்கு அந்த பிரச்சனை தான் உள்ளது- சீரியல் நடிகர் அமித் பார்கவ் | Serial Actor Amit Bhargav About Daughter Health



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments