நடிகை சீதா
தமிழ், கன்னடம், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து 80-களில் பிரபலமானவர் நடிகை சீதா. இவர் ஆண் பாவம் படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி அடைந்த நிலையில் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.
இந்த நிலையில், இயக்குனரும் நடிகருமான பார்த்திபனை பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். பிறகு, இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதன் பின், அவ்வப்போது சினிமாவில் நடித்து கொண்டிருந்த சீதா, சமீபத்தில் My Perfect Husband என்ற வெப் சீரிஸில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் சீதா பேசியுள்ளார்.
வெளிப்படையான பேச்சு
அதில், நம்முடைய அடையாளத்தை இழக்கும் அந்த இடத்தில் நாம் நம்முடைய வாழ்க்கையை இழந்து விடுகிறோம். மீண்டும் அந்த அடையாளத்தை அடைய நினைக்கும்போது அதற்காக நிறைய கஷ்டப்பட வேண்டி உள்ளது. அந்த வகையில், நான் என் வாழ்க்கையில் நடிப்பை கைவிட்டு மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.