Monday, March 24, 2025
Homeசினிமாஎலிமினேட் ஆன சிவகுமார் சொன்ன அந்த வார்த்தை.. வழியனுப்ப வெளியே கூட வராத முத்துக்குமரன்!

எலிமினேட் ஆன சிவகுமார் சொன்ன அந்த வார்த்தை.. வழியனுப்ப வெளியே கூட வராத முத்துக்குமரன்!


பிக் பாஸ் 8ம் சீசனில் இருந்து இன்று சிவக்குமார் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். நாமினேஷன் லிஸ்டில் கடைசி 4 போட்டியாளர்களுக்கு ஒரு பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதில் சிவக்குமார் தான் எலிமினேஷன் என தெரியவந்தது. அதை அவரும் பெரிய அதிர்ச்சியாக எடுத்துக்கொள்ளாமல் சகஜமாக வெளியில் கிளம்பும் வேலையை பார்த்தார்.

எல்லோர் முன்பும் தான் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு போக வேண்டும் என சொல்லி தனது கதையை 5 நிமிடம் சொன்னார் சிவக்குமார். மேலும் போட்டியாளர்கள் பற்றி பேசிய அவர் தீபக் திமிர் பிடித்தவர் என நினைத்துகொண்டு தான் உள்ளே வந்தேன், அவரை முறைத்து கொண்டு நின்றேன், ஆனால் அவர் அப்படியே opposite என்பது இப்போது புரிந்துகொண்டேன் என கூறினார்.


மற்ற போட்டியாளர்கள் பற்றி அவர் பேசியது ஒளிபரப்பாகவில்லை.

வெளியில் கூட வராத முத்துக்குமரன்

சிவக்குமார் வெளியில் கிளம்பும்போது அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். அனைவரும் அவரை வழியனுப்ப வாசல் வரை வந்தனர். ஆனால் முத்துக்குமரன் மட்டும் வரவில்லை.

ஏன் அப்படி செய்தார். முத்துக்குமரன் பற்றி சிவக்குமார் ஏதோ பேசி இருக்கிறார், அதனால் தான் இப்படி ஆகி இருக்கிறது.

‘உங்களால் முடியாது என சொல்வாங்க. நம்பாதீங்க. பின்னாடி பேசுறவங்க எல்லாருக்கும் சொல்றேன்’ என சிவக்குமார் வெளியேறும்போது முத்துகுமாரனை பார்த்து ஒரு வரி கூறினார். ‘வாழ்க்கைல சொல்றேன், இங்க இல்லை’ எனவும் அவர் தெரிவித்தார்.


இதை கேட்டுவிட்டு தான் முத்துக்குமரன் அவரை வழியனுப்ப செல்லாமல் மீண்டும் உள்ளே சென்று தூரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார். 

எலிமினேட் ஆன சிவகுமார் சொன்ன அந்த வார்த்தை.. வழியனுப்ப வெளியே கூட வராத முத்துக்குமரன்! | Bigg Boss 8 Shiva Kumar Eliminated From House

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments