ராயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷின் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
மக்கள் மத்தியில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ராயன். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். மேலும் மிரட்டல் வில்லன் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் நடித்திருந்தார்.
வசூல்
உலகளவில் தனுஷின் ராயன் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்த நிலையில் கடந்த 5 நாட்களில் ராயன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ராயன் பத்ம கடந்த 5 நாட்களில் உலகளவில் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் ராயன் இணையப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.