Thursday, February 13, 2025
Homeசினிமாஐஸ்வர்யா ராய் - அபிஷேக் விவாகரத்து சர்ச்சை.. சஞ்சய் தத்தின் அதிர்ச்சி பேட்டி

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் விவாகரத்து சர்ச்சை.. சஞ்சய் தத்தின் அதிர்ச்சி பேட்டி


ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் மிக பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார்.

ஐஸ்வர்யா ராய் அவரது கணவர் அபிஷேக்கை விவாகரத்து செய்யப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. அதற்கு சமீபத்தில் திருமண மோதிரத்தை காட்டி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தார்.

இருப்பினும் சில நாட்களாகவே நடிகை ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யப்போவதாகவும், வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் அவை அனைத்தும் பொய்யான தகவல் தான் என்று இவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, அபிஷேக் பச்சன் தனது சமீபத்திய படமான ‘தஸ்வி’ – யில் நடித்த நடிகை நிம்ரத் கவுருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும் தகவல் வந்த வண்ணம் உள்ளது.

சஞ்சய் தத் பேட்டி 

இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத் ஐஸ்வர்யா ராய் குறித்து முன்பு பேசிய ஒரு பழைய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில், “மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் அழகில் பலர் மயங்கி இருந்தனர் அதில் நானும் ஒருவன்.

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் விவாகரத்து சர்ச்சை.. நடிகர் சஞ்சய் தத்தின் அதிர்ச்சி பேட்டி | Actor Sanjay About Aishwarya

முதன்முறையாக நான் ஒரு விளம்பரப் படத்தில் அவரை பார்த்தேன் அப்போது அவரிடம் திரையுலகில் நுழைய வேண்டாம் என்று கூறினேன்.

அதற்கு முக்கிய காரணம் திரையுலகின் கடினமான போட்டிகள் அவரது அழகையும் மனதையும் பாதிக்கக்கூடும், அந்த அழகு கெட்டுவிடக் கூடாது என்று கூறினேன்” என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments