சன் டிவி
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொழுதுபோக்கு விஷயமாக இருப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் தான்.
பெண்கள் அதிகம் சீரியல்களுக்கு வரவேற்பு கொடுத்தாலும் பெண்களை மையப்படுத்திய கதைகள் தான் அதிகம் ஒளிபரப்பாகிறது.
அதிலும் சன் டிவியை எடுத்துக்கொண்டால் கயல், சுந்தரி, மூன்று முடிச்சு, மருமகள், சிங்கப்பெண்ணே, மலர், சுந்தரி என பெண்களை மையப்படுத்திய கதைகளே ஒளிபரப்பாகி வருகிறது.
மற்ற தொலைக்காட்சிகளிலும் பெண்களை மையப்படுத்தி தான் சீரியல்கள் அதிகம் வருகின்றன. பெண்களுக்கு ஆண்களை தாண்டி அதிக வாய்ப்பு இருப்பதால் அவர்கள் சம்பளமும் பெரிய அளவில் தான் உள்ளது.
சம்பள விவரம்
அண்மையில் சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கான் ஒரு பேட்டியில், சீரியல் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், சினிமாவில் நடித்துவிட்டு சிலர் சீரியலுக்கு வரும் போதோ அல்லது ஹிட் சீரியல்களில் படித்தவர்களாக இருக்கும் பட்சத்தில் சிலர் தங்களுக்கு இருக்கும் வரவேற்பு பொறுத்து ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் கூட சம்பளம் பெறுகிறார்கள் என கூறியுள்ளார்.
கதாநாயகிகளை விட சீரியல்களில் கதாநாயகர்களுக்கு சம்பளம் குறைவு தான் என்றிருக்கிறார். அவர் ரூ. 1 லட்சம் சம்பளம் பெறும் நடிகை என கூறுவது மூன்று முடிச்சு சீரியல் நாயகி சுவாதி கொண்டேவை தான் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.