தனுஷ்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுஷ் தற்போது இயக்குனராகவும் மக்களை கவர்ந்து வருகிறார். இவர் இயக்கி நடித்து சமீபத்தில் வெளிவந்த ராயன் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
அடுத்ததாக இவர் நடிப்பில் குபேரா, Tere ishq mein ஆகிய படங்கள் உருவாகவுள்ளது. மேலும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
மேலும் avengers doomsday திரைப்படத்திலும் தனுஷ் நடிக்கப்போவதாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் செய்திகள் உலா வருகிறது. the grey man படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் திரைப்படமாக இது அமையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
சம்பளம்
இந்த நிலையில், நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.