ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வெளியான படம் ஜெயிலர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் ரஜினியை தொடர்ந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்தனர்.
படம் சூப்பர் வசூல் வேட்டை நடத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக காசோலைகள் மற்றும் சொகுசு கார்களை வழங்கினார்.
படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளித்தார்.
மொத்த வசூல்
ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் ஜெயிலர் படம் வெளியாகி இன்றோடு ஒரு வருடத்தை எட்டியுள்ளது.
தற்போது ஜெயிலர் படத்தின் முழு வசூல் விவரத்தை காண்போம்.
-
தமிழ்நாடு- ரூ. 195 கோடி -
ஆந்திரா, தெலுங்கானா- ரூ. 85 கோடி - கேரளா- ரூ. 57.5 கோடி
- கர்நாடகா- ரூ. 70 கோடி
-
மற்ற இடங்கள்- ரூ. 17.5 கோடி - ஓவர்சீஸ்- ரூ. 200 கோடி