அர்ச்சனா
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்க சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பாகி வந்த தொடர் ராஜா ராணி 2.
சித்து மற்றும் ஆல்யா மானசா இருவரும் நாயகன்-நாயகியாக நடிக்க அர்ச்சனா வில்லியாக நடித்தார். அவரது சினிமா பயணத்திற்கு ராஜா ராணி 2 தொடர் முக்கிய பங்கு வகித்தது.
பின் இடையில் தொடரில் இருந்து விலகிய அர்ச்சனா தனது லுக்கை மாற்றி போட்டோ ஷுட் நடத்துவது, பாடல்கள் நடிப்பது என பிஸியாகவே இருந்தார்.
கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டு எண்ட்ரியாக நுழைந்து வெற்றியாளரானார்.
வைரல் போட்டோஸ்
பிக்பாஸ் வென்ற அர்ச்சனா அதிகம் சுற்றுலா செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது என இருக்கிறார். இந்த நிலையில் நடிகை அர்ச்சனா அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருக்கும் அர்ச்சனா தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.