கேவி ஆனந்த்
மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த், சூர்யா, விஜய் சேதுபதி, ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர். இப்போதும் கோ, அயன், கவண் உள்ளிட படங்கள் பலரின் பேவரைட் லிஸ்டில் இருக்கிறது.
பேட்டி
இந்நிலையில் பிரபல பாடல் ஆசிரியர் கபிலன் வைரமுத்து, இயக்குனர் கே வி ஆனந்த் குடித்து பேசியுள்ளார். அதில் அவர், கேவி ஆனந்த் இயக்கத்தில் அடுத்தடுத்து நான்கு படங்களை உருவாக்க பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் முதல் படத்தில் சிம்பு வை வைத்து கேங்ஸ்டர் படம் எடுக்கதிட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருந்தார்.
இப்படத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்த சமயத்தில் தான் கேவி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார் என்று கபிலன் வைரமுத்து கூறியுள்ளார்.