நடிகை ரச்சிதா
தமிழ் சின்னத்திரையில் நமக்கு மிகவும் பரீட்சயமான நடிகைகளில் ஒருவர் ரச்சிதா.
பிரிவோம் சந்திப்போம் தொடர் தமிழில் அவருக்கு முதல் தொடர், அதில் அழகாக நடிக்க வேண்டும் என்பது இல்லாமல் தனது நிறத்தை கருப்பாக மாற்றி நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் அவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு தான் சரவணன் மீனாட்சி என்ற ஹிட் தொடரின் 2வது சீசனில் நாயகியாக நடிப்பது. தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.
பின் நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து நடித்து வந்தார்.
புதிய பதிவு
இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ரச்சிதா சமீபத்தில் ஒரே லவ் போஸ்ட் பதிவிட்டுள்ளார். லவ் லவ் லவ் என செம மூடில் வீடியோ பதிவு போட அதில் SelfLove என டாக் போட்டுள்ளார்.
சட்டென அவரது வீடியோவை கண்டதும் ரச்சிதா காதலில் விழுந்துவிட்டாரா என நினைக்க அவரது பதிவு அப்படி இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.