Saturday, March 15, 2025
Homeசினிமாஓடிடி-யிலும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த குடும்பஸ்தன்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

ஓடிடி-யிலும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த குடும்பஸ்தன்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு


மணிகண்டனின் குடும்பஸ்தன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இவர் விக்ரம் வேதா, காதலும் கடந்து போகும் போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஆனால், ஜெய் பீம் படத்தில் நடித்தபின் தான் ரசிகர்களிடையே பிரபலமானார். இதை தொடர்ந்து வெளிவந்த குட் நைட் மற்றும் லவ்வர் ஆகிய படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.

2023, 2024 என ஒவ்வொரு ஆண்டும் வெற்றி படங்களை கொடுத்து வந்த மணிகண்டன் 2025ம் ஆண்டு குடும்பஸ்தன் எனும் சிறந்த வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார். ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்தது. உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

ஓடிடி 

திரையரங்கில் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஓடிடியில் வெளிவந்த குடும்பஸ்தன் படம் தற்போது அங்கும் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆம், ஜீ 5 ஓடிடி தளத்தில் குடும்பஸ்தன் படம் வெளிவந்துள்ளது.

ஓடிடி-யிலும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த குடும்பஸ்தன்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு | Kudumbasthan Movie Streaming Record In Ott

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை ஜீ 5 நிறுவனமே தனது சோசியல் மீடியாவில் அறிவித்துள்ளனர். இதோ நீங்களே பாருங்க..

Gallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments