Friday, September 20, 2024
Homeசினிமாஓ.டி.டி யில் உள்ள டாப் தென்னிந்திய படங்கள்.. லிஸ்ட் இதோ!!

ஓ.டி.டி யில் உள்ள டாப் தென்னிந்திய படங்கள்.. லிஸ்ட் இதோ!!


திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தென்னிந்திய படங்கள் தற்போது எந்த ஓடீடீ தளத்தில் உள்ளது என்பதை பற்றி காணலாம்.


மகாராஜா :



இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. அழுத்தமான கதையம்சம் கொண்ட இந்த படம் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓ.டீ.டீ தளத்தில் காணலாம்.


சீதா ராமம் :


துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படம் பெரிய வெற்றியை சந்தித்த நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது.

ஓ.டி.டி யில் உள்ள டாப் தென்னிந்திய படங்கள்.. லிஸ்ட் இதோ!! | Top Ott Movie List


காந்தாரா :


கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ள மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டீ .டீ தளத்தில் காணலாம்.

ஓ.டி.டி யில் உள்ள டாப் தென்னிந்திய படங்கள்.. லிஸ்ட் இதோ!! | Top Ott Movie List

ஆர். ஆர். ஆர் 



ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘ஆர்ஆர்ஆர்’. இந்த படம் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியானது. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

ஓ.டி.டி யில் உள்ள டாப் தென்னிந்திய படங்கள்.. லிஸ்ட் இதோ!! | Top Ott Movie List


சலார் :



இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘சலார்’. இந்த படத்தை கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் காணலாம்.

ஓ.டி.டி யில் உள்ள டாப் தென்னிந்திய படங்கள்.. லிஸ்ட் இதோ!! | Top Ott Movie List

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments