சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருக்கும் கங்குவா படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி ஹிந்தியிலும் அதிக தியேட்டர் எண்ணிக்கையில் படம் வெளியாகி இருக்கிறது.
படம் பான் இந்தியா ஹிட் ஆகும், 1000 கோடி – 2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறி இருந்தது படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது தியேட்டர்களில் படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் தான் கொடுத்து இருக்கின்றனர்.
இலங்கையில் வரவேற்பு
ஆனால் இலங்கையில் கங்குவா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறதாம். வேட்டையன், இந்தியன் 2 போன்ற படங்களை விட கங்குவா முதல் நாளில் அதிகம் வசூல் வந்திருக்கிறதாம்.
ஓப்பனிங் வசூலில் GOAT படத்திற்கு அடுத்த இடத்தை கங்குவா இலங்கையில் பெறும் என தகவல் வந்திருக்கிறது.