Wednesday, March 26, 2025
Homeசினிமாகங்குவா படத்துக்கு தடை கோரி வழக்கு.. விசாரணை நாளை ஒத்திவைப்பு

கங்குவா படத்துக்கு தடை கோரி வழக்கு.. விசாரணை நாளை ஒத்திவைப்பு


கங்குவா

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வரவிருக்கும் படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகியுள்ள கங்குவா படம் உலகளவில் 10,000 திரையரங்கில் வரும் 14 – ம் தேதி வெளியாக உள்ளது.

இரண்டு பழங்குடி மக்களுக்கு இடையே நிகழும் மோதலை அடிப்படையாக கொண்டு படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

தடை

இந்நிலையில், கங்குவா படத்தை தடை செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தர வேண்டிய பாக்கித் தொகையை தர வேண்டும் என கூறி இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

கங்குவா படத்துக்கு தடை கோரி வழக்கு.. விசாரணை நாளை ஒத்திவைப்பு | Kanguva Movie Case Filed

தற்போது உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பாக்கித் தொகை நாளை தரப்படும் என்று உறுதி கொடுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments