கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகிறது.
இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வரலாற்று கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பாட்னி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கார்த்தி இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.
முதல் விமர்சனம்
இந்த நிலையில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் கங்குவா படத்தின் 40 நிமிட காட்சிகளை பார்த்துவிட்டு மிரண்டுபோய்விட்டாராம்.
படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவாவை தொடர்ந்து புகழ்ந்து கொண்டே, படம் நன்றாக வந்துள்ளது என தனது விமர்சனத்தையும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.