ஹிப்ஹாப் ஆதி
இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்து, பின் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, அதன்பின் இயக்குனர், நடிகர் என அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றவர் ஹிப்ஹாப் ஆதி.
இவர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனி ஒருவன், இன்று நேற்று நாளை போன்ற படங்களுக்கு சூப்பர்ஹிட் ஆல்பம் கொடுத்தார்.
கடைசி உலகப்போர்
இன்று தன்னுடைய படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். அது தான் கடைசி உலகப்போர். நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியுடன் இணைந்து நட்டி நட்ராஜ், நாசர், அனகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வசூல்
இந்த நிலையில், கடைசி உலகப்போர் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.