Thursday, January 16, 2025
Homeசினிமாகணக்கிட முடியாத ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றிருக்கும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கணக்கிட முடியாத ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றிருக்கும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?


நடிகர் விஜய்

நடிகர் விஜய், இன்று தமிழக ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் பிரபலம்.

இந்திய சினிமா நடிகர்கள் லிஸ்டில் டாப்பில் இருக்கும் இவர் இப்போது நடிப்பிற்கு முழுக்கு போடுவதாக அறிவித்தது அனைவருக்கும் ஷாக் தான் ஆனால் அவர் அரசியலில் களமிறங்கி மக்களுக்கு உதவ இருப்பதால் ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷம் தான்.

இப்போது தனது 68வது படமான கோட் படத்தில் நடித்துள்ளார், அடுத்து கடைசியாக தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் அவரது கடைசி படம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

கள்ளக்குறிச்சியில் நடந்த துயர சம்பவத்தால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் கூறியிருக்கிறார்.


சொத்து மதிப்பு

இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய் படத்துக்கு படம் தனது சம்பளத்தை ஏற்றி இப்போது கடைசி படத்திற்காக ரூ. 250 கோடி முதல் ரூ. 275 கோடி வரை சம்பளம் பெறுவார் என்கின்றனர்.

சொந்தமாக விஜய்க்கு ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார், ரூ. 1.30 கோடி மதிப்பிலான ஆடி A8, ரூ.75 லட்சம் மதிப்புள்ள BMW series 5, ரூ. 90 லட்சம் மதிப்புள்ள BMW X6, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள மினி கூப்பர் உள்ளிட்ட கார்கள் மற்றும் விலையுயர்ந்த சைக்கிள் மற்றும் பைக்குகளும் உள்ளன.

அதோடு நீலாங்கரை, பனையூர், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பங்களாக்கள் உள்ளன. இப்படி வெளியே தெரிந்த விஷயங்களை வைத்து விஜய்யின் சொத்து மதிப்பு ரூ. 600 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

கணக்கிட முடியாத ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றிருக்கும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Actor Vijay Salary And Net Worth Details

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments