நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து ஓய்வு பெறப்போவது அனைவருக்குமே ஒரு வருத்தமான விஷயம்.
மார்க்கெட்டில் இவர் படம் என்றாலே பெரிய அளவில் வியாபாரம் ஆகும், அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படமும் பெரிய வியாபாரம் ஆனது, வசூல் வேட்டையும் நடந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இயக்குனர் ஓபன் டாக்
இந்த நிலையில் நந்தன் படத்தில் நடித்துள்ள சசிகுமார் அப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார், அவர் மீண்டும் நடிக்க வருவார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
அரசியலில் இருந்தாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.