குக் வித் கோமாளி 5
சினிமாவோ, சின்னத்திரையோ அதில் இருக்கும் பிரபலங்கள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே வெளியே சொல்ல மாட்டார்கள்.
அப்படி சொல்கிறார்கள் என்றால் அது அப்படியே பூகம்பமாக வெடித்துவிடும். அப்படி தான் இப்போது எல்லோராலும் சிரித்து சிரித்து ரசிக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.
அதாவது இந்த 5வது சீசனில் தொகுப்பாளினியாக கலக்கிவந்த மணிமேகலை, இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஒரு தொகுப்பாளினி தனது வேலையை செய்ய விடாமல் பிரச்சனை செய்ததாக ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
பிக்பாஸ் அர்ச்சனா
மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து பலரும் நிறைய கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் பிக்பாஸ் புகழ் அர்ச்சனாவிடம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் வெடித்துள்ள மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர், எனக்கு இரண்டு மேரையும் தெரியாது, நான் வேலைக்கு சென்றால், என் வேலை உண்டு, நான் உண்டு என இருப்பேன், என் வேலையில் மட்டும் தான் கவனமா இருப்பேன்.
Seniority வைத்து நான் பெரியவள், நீ சிறியவள் என்று சொல்வதெல்லாம் தவறு என கூறியுள்ளார்.