Tuesday, February 11, 2025
Homeசினிமாகனத்த இதயத்துடன் பாலா அவர்களுக்கு.. வணங்கான் பார்த்துவிட்டு அருண்விஜய் குடும்பம் சொன்ன விமர்சனம்

கனத்த இதயத்துடன் பாலா அவர்களுக்கு.. வணங்கான் பார்த்துவிட்டு அருண்விஜய் குடும்பம் சொன்ன விமர்சனம்


சூர்யா நடித்து பாதியிலேயே வெளியேறிய படம் வணங்கான். அதன் பிறகு பாலா அந்த படத்தை அருண் விஜய்யை வைத்து எடுத்து முடித்திருக்கிறார்.

தற்போது முழு படத்தையும் அருண் விஜய் தனது குடும்பத்திற்கு போட்டு காட்டி இருக்கிறார். அதை பார்த்துவிட்டு அவர்கள் நெகிழ்ந்துவிட்டார்களாம்.

அதன் பின் பாலாவுக்கு நன்றி கூற ட்விட்டரில் ஒரு பதிவை அருண் விஜய் போட்டிருக்கிறார்.

பாலா சார் அவர்களுக்கு..

மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு,

நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக “எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா” என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற ‘வணங்கான்’ படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை.
ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில்,
என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.
என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன். எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை. 

இவ்வாறு அருண் விஜய் பதிவிட்டு இருக்கிறார்.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments