Wednesday, January 15, 2025
Homeசினிமா'கனா காணும் காலங்கள்' சீரிஸின், அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது !!

‘கனா காணும் காலங்கள்’ சீரிஸின், அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது !!


இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான “கனா காணும் காலங்கள்” சீரிஸின், முதல் இரண்டு சீசன்களின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது ‘கனா காணும் காலங்கள்’ சீரிஸின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



‘கனா காணும் காலங்கள்’ முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியதால், மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது.



வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையிலும், அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ரசிகர்களிடமிருந்து பெருமளவிலான கோரிக்கைகள் குவிந்ததையும் அடுத்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், கடந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று, இந்த சூப்பர்ஹிட் சீரிஸின், இரண்டாவது சீசனை வெளியிட்டது.



இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும், இந்த சீரிஸின் மூன்றாவது சீசனை வெளியிட முடிவு செய்துள்ளது.



முதல் மற்றும் இரண்டாவது சீசன்களைப் போலவே, இந்த சீசனும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் , இன்றைய மாணவர்களின் வாழ்வின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், வலிகள் மற்றும் சிலிர்ப்புகள் என அனைத்தையும் படம்பிடித்துக் காட்டும்படி உருவாகவுள்ளது.


இந்த சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர்கள், குழுவினர் மற்றும் இந்த சீரிஸ் பற்றிய விவரங்களை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.



டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments