இந்தியாவின் பணக்கார குடும்பம்
நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என தங்கள் வாரிசுகளை சினிமா துறையில் இறக்கி சினிமா குடும்பமாக வலம் வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என எந்த மொழி எடுத்தாலும் சினிமா குடும்பங்கள் உள்ளன.
ஆனால், இதில் மிகவும் பணக்கார குடும்பம் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள்.
அவர்கள் வேறு யாருமில்லை 4 சூப்பர் ஸ்டார்களை கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பம் தான்.
இந்த குடும்பம் இந்தியாவின் மிகவும் முக்கியமான சினிமா குடும்பங்களில் ஒன்று.
பிரபல நடிகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் ஜொலித்து கொண்டிருந்த அல்லு ராமலிங்கய்யா தான் இந்த குடும்பம் உருவாக காரணமாக இருந்தார்.
அல்லு ராமலிங்கய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்ற நட்சத்திரங்களை திருமணம் செய்து கொண்டதால் இந்த குடும்பம் பிரபலமானது.
சொத்து மதிப்பு
இதன் மூலம், இந்த குடும்பத்திற்கு ராம் சரண், அல்லு அர்ஜூன், நாகேந்திர பாபு போன்ற பிரபல நட்சத்திரங்கள் தெலுங்கு சினிமாவிற்கு கிடைத்தனர்.
இந்த புகழ்பெற்ற பணக்கார குடும்பத்தின் சொத்து மதிப்பை மொத்தமாக பார்த்தால் ரூ. 6,000 கோடி என சொல்லப்படுகிறது.
இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு, கபூர் குடும்பத்தை மற்றும் அக்கினேனி குடும்பத்தை காட்டிலும் அதிகம் என சொல்லப்படுகிறது.