கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். தற்போது, மணிரத்னம் இயக்கத்தில் ‘தக்லைப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
‘நாயகன்’ படத்திற்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி இணைந்துள்ளது என்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் சிம்புவும் இணைந்து நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டு வருகிறது. அதனால் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் திரையில் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.
அட்லீ படத்தில் நடிக்க காரணம்
‘தக்லைப்’ படத்திற்கு பிறகு அட்லி பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து இயக்கும் படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், கமல்ஹாசன் அட்லீ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் நடிக்க கமல்ஹாசன் ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
மேலும், இது ஒரு பான் இந்திய படமாக உருவாக இருப்பதால் கமலின் மார்க்கெட் மற்றும் சம்பளம் பாலிவுட்டில் அதிகரிக்கும் என்ற காரணத்திற்காக அவர் அட்லீ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.