பிக்பாஸ் 8
பிக்பாஸ் தென்னிந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி ஒளிபரப்பாகி வந்த ஷோ.
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துவிட்டது. 7 சீசன்கள் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் சம்பளம் ரூ.100 கோடிக்கு மேல் இருந்தது.
தற்போது இந்த 8வது சீசனை கமல்ஹாசன் அவர்களுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார், அவர் இடம்பெறும் இந்த 8வது சீசன் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆர்வமாக தான் உள்ளார்கள்.
ரச்சிதா ஓபன் டாக்
இந்த நிலையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரான ரச்சிதா, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது குறித்து பேசியுள்ளார்.
கமல்ஹாசன் அவர்களின் தீவிர ரசிகை நான், இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர். அனுபவம், அறிவாற்றல் பெற்றவர் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
எந்த தலைப்பு கொடுத்தாலும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் பேசுவார். விஜய் சேதுபதி இனிமையானவர், பணிவானவர், நேர்மறை குணங்களைக் கொண்டவர்.
இருந்தாலும் போட்டியாளர்களை கையாள்வதில் கமல்ஹாசன் உடன் ஒப்பிட முடியாது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதை மற்றவர்களை போலவே நானும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன், கமல் அவர்களின் இடத்தில் விஜய் சேதுபதியை பார்க்க ஆவலுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார்.