இந்தியன் 2
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படம் என்றாலே மக்களிடம் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
அவர் தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி இருக்கிறார், படம் உலகம் முழுவதும் சுமார் 5000க்கும் அதிகமான ஸ்க்ரீன்களில் வெளியாகிறது.
தமிழ் மட்டுமில்லாது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது.
நாளை (ஜுலை 12) இப்படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது, டிக்கெட் புக்கிங்கும் சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.
ப்ரீ புக்கிங்
2 லட்சத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் தமிழ்நாட்டில் உள்ள 750 திரையரங்குகளில் ப்ரீ புக்கிங் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ரூ. 4.53 கோடி வசூல் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலமாக இதுவரை கலெக்ஷன் செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டுமே முதல்நாள் ரூ. 6 கோடி வசூலை தாண்டும் என்கின்றனர்.
அதேபோல் உலகம் முழுவதும் நடந்த ப்ரீ புக்கிங்கில் ரூ. 20.7 கோடி இப்போது வசூல் வந்துள்ளதாம்.
அதிகபட்சமாக முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 50 கோடி வரை கமல்ஹாசனின் இந்தியன் 2 வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது.
ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தியன் 2 படம் நாளை ரிலீஸ் ஆகி எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து காண்போம்.