Monday, January 13, 2025
Homeசினிமாகமல்ஹாசன் இல்லை.. இந்தியன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா

கமல்ஹாசன் இல்லை.. இந்தியன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா


ஷங்கர் இயக்கத்தில் 28 வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் இந்தியன். அதில் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் அசத்தலாக நடித்து இருப்பார் கமல்ஹாசன்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ் என கதையை இரண்டாம் பாகத்தில் தொடர்ந்து இருக்கிறார் ஷங்கர். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் மூன்று மணி நேரமாக இருக்கும் ரன்டைமை 20 நிமிடங்கள் குறைக்க ஷங்கர் முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஜினிக்காக எழுதப்பட்ட கதை

இந்தியன் படம் முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக எழுதப்பட்ட கதை என்பது எத்தனை பேருக்கு தெரியும்?.

ஷங்கர் காதலன் படத்தை இயங்கிக்கொண்டிருந்த போது ஷங்கரை அழைத்த ரஜினி தனக்கு ஒரு கதை இருக்கிறதா என கேட்டிருக்கிறார். அப்போது அவருக்கு ஷங்கர் சொன்ன கதை தான் இந்தியன். 

ஆரம்பத்தில் பெரிய மனுஷன் என இந்த கதைக்கு டைட்டில் வைத்திருந்தாராம் ஷங்கர். கால்ஷீட் பிரச்சனைகளால் ரஜினி உடனே தேதிகள் ஒதுக்க முடியாத நிலையில் அந்த கதை கமல்ஹாசனுக்கு சென்று இருக்கிறது.

 அவர் ஒப்புக்கொண்டதால் இந்தியன் படம் உருவாகி, 1996ல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது.

கமல்ஹாசன் இல்லை.. இந்தியன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா | Not Kamal Shankar Wrote Indian For This Actor

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments