KH 237
பான் இந்தியா ஸ்டண்ட் கலைஞர்களாக திகழும் அன்பு – அறிவு, நடிகர் கமல்ஹாசனை வைத்துபடம் இயக்கபோவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளிவந்தது.
இந்த புதிய படத்திற்கு தற்காலிகமாக KH 237 என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர், இந்தப் படத்தை ஹாலிவுட்டில் ஹிட் அடித்த ஜான்விக் படம் போல இருக்கும் எனக் கூறுகின்றன.
அப்டேட்
இந்தியன் 2 படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்களுக்கு பிறகு கமல் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
KH 237 படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.