கம்பஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 03 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் கடையொன்றிற்குள் இருந்த குழு மீது நேற்றைய தினம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கட்டுகஸ்தர மற்றும் யக்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.