Friday, December 6, 2024
Homeசினிமாகருடன் ரீமேக் படத்தில் இணைந்த முன்னணி நடிகைகள்.. யார் தெரியுமா

கருடன் ரீமேக் படத்தில் இணைந்த முன்னணி நடிகைகள்.. யார் தெரியுமா


கருடன் ரீமேக்

சூரி கதாநாயகனாக நடித்து சில மாதங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் கருடன். இப்படத்தை பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷ்ணி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்த இப்படம் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

கருடன்  ரீமேக்

இந்த படத்திற்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது கருடன் படத்தை தெலுங்கு மொழியில் அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும், மேலும் இந்த படத்தில் மஞ்சு மனோஜ், நாரா ரோஹித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம்.

கருடன் ரீமேக் படத்தில் இணைந்த முன்னணி நடிகைகள்.. யார் தெரியுமா | Garudan Remake Film Is Happening In Hyderabad

அவர்களுடன் இணைந்து கருடன் ரீமேக் படத்தில் ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments