நிவேதா-சுரேந்தர்
சீரியல் பிரபலங்கள் தான் இப்போது மக்கள் அதிகம் பாலோ செய்பவர்களாக உள்ளனர்.
எந்த தொடரில் யார் நடித்தாலும் அவரை பற்றி நன்கு மக்கள் அறிந்துகொள்கிறார்கள்.
அப்படி மகராசி போன்ற சீரியல்களில் பிரபலமான ஒரு நடிகை தான் நிவேதிதா. இவர் அந்த தொடரில் நடிக்கும் போது ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் சில காரணங்களாக இருவரும் பிரிய நிவேதிதா, சுரேந்தர் என்ற சீரியல் நடிகரை காதலித்து மறுமணம் செய்தார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்களின் கல்யாணம் நடந்து முடிந்தது.
கர்ப்பம்
இந்த நிலையில் நிவேதிதா மற்றும் சுரேந்தர் ரசிகர்களுக்கு ஒரு குட்டி நியூஸ் கூறியுள்ளனர்.
அதாவது நிவேதிதா கர்ப்பமாக உள்ளாராம், இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்து இந்த ஸ்பெஷல் தகவலை கூறியுள்ளனர்.