நடிப்பை மிகவும் விரும்பி அதற்காக தொடர்ந்து தனது உழைப்பை போடும் நடிகைகள் பலர் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகைகள் அவர்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கூட படத்தில் தொடர்ந்து நடித்து அவர்களுக்கு சினிமா மேல் இருக்கும் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
அவ்வாறு கர்ப்பமாக இருந்தபோது படத்தில் நடித்த பாலிவுட் நடிகைகள் பற்றி காணலாம்.
தீபிகா படுகோன் :
தீபிகா கல்கி 2898 கி.பி படத்தில் கர்ப்பமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பின் போது தீபிகா கர்ப்பமானார். இருப்பினும், அதை பற்றி சற்றும் யோசிக்காமல் தன்னுடைய சிறந்த நடிப்பை படத்தில் வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஆலியா பட் :
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். இவர் அவரது காதலன் மற்றும் நடிகரான ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். பிறகு, கர்ப்பமாக இருந்த இவர் ஹாலிவுட் படமான ஹார்ட் ஆஃப் ஸ்டோன் எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்தார்.
கரீனா கபூர்:
கரீனா கபூர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்து கொண்டிருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவர் ஐந்தரை மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.