Sunday, November 3, 2024
Homeசினிமாகர்ப்பமான சமந்தா.. மகிழ்ச்சியில் நாகர்ஜுனா குடும்பம்

கர்ப்பமான சமந்தா.. மகிழ்ச்சியில் நாகர்ஜுனா குடும்பம்


நாக சைதன்யா – சோபிதா

நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். 4 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.

இதன்பின் சில மாதங்களுக்கு முன் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார் என தகவல் வெளியானது. நிச்சயதார்த்தமும் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. அந்த புகைப்படங்களை கூட நாகர்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

கர்ப்பமான சமந்தா

நாக சைதன்யாவின் வருங்கால மனைவியான சோபிதாவுக்கு சமந்தா என்ற தங்கை இருக்கிறார். அவர் சாஹில் குப்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் மருத்துவர்களாக டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பமான சமந்தா.. மகிழ்ச்சியில் நாகர்ஜுனா குடும்பம் | Sobhita Dhulipala Sister Samanta Pregnant

இந்த நிலையில், சோபிதா துலிபாலாவின் தங்கை சமந்தா கர்ப்பமாகியிருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. அதனையொட்டி அவருக்கான வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாம். தங்களது வருங்கால மருமகளின் தங்கைக்கு வளைகாப்பு நடந்துள்ளது நல்ல விஷயம் என்பதால் நாகர்ஜுனா குடும்பம் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments