Friday, April 18, 2025
Homeசினிமாகலர் பற்றி பேசிய நபர்.. ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையிலேயே கொடுத்த பதில்

கலர் பற்றி பேசிய நபர்.. ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையிலேயே கொடுத்த பதில்


பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்றாலே கேரளா அல்லது வட இந்தியாவில் இருந்து தான் கொண்டு வருவார்கள். அதுவும் பால் போல வெள்ளையாக இருந்தால் தான் ஹீரோயின் ஆகமுடியும் என சொல்லும் நிலையில் தான் தமிழ் சினிமாவும் இருக்கிறது.

மேலும் நன்றாக தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்கள் என்றால் மிக குறைவு தான். அந்த லிஸ்டில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமானவர். சென்னையில் தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் நன்றாக தமிழ் பேசுவார்.

இது தான் என் கலர்..

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார். அங்கு பையன் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் கலர் பற்றி கேள்வி எழுப்பிவிட்டார்.

“உங்க ஒரிஜினல் கலரே இதுதானா?” என அவர் கேட்க, “நான் மாநிறம் தான், நம்ம ஊரு கலரு அதுதான். ரொம்ப வெள்ளையும் இல்லை, ரொம்ப கருப்பும் இல்லை. மாநிறத்தில் இருக்கும் பெண்கள் தான் அழகாக கலையாக இருப்பார்கள்” என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறி இருக்கிறார். 

கலர் பற்றி பேசிய நபர்.. ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையிலேயே கொடுத்த பதில் | Aishwarya Rajesh Reply On Her Skintone

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments