கலைஞர் டிவி
சன், விஜய், ஜீ தமிழ் என அனைத்து தொலைக்காட்சியிலும் ரசிகர்களை கவரும் வண்ணம் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் உள்ளன.
ஆனால் மற்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில ரியாலிட்டி ஷோக்கள் நல்ல கான்செப்டில் இருந்தாலும் அடுத்தடுத்து அந்த ஷோக்கள் வராது. அப்படி மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் நாளைய இயக்குனர்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சி திரைப் படத்துறையின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு நல்லதொரு பிளாட்பார்ம் ஆக இருந்தது.
ஆனால் தொடர்ந்து இந்த ஷோ ஒளிபரப்பாகவில்லை.
சுந்தர்.சி
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசும்போது, நாளைய இயக்குனர் 3 சீசனில் புது இயக்குனர்களையும் நடிகர்களையும் பார்த்தது நல்ல அனுபவம்.
அது மாதிரி நிகழ்ச்சியை எந்த சேனலாவது தொடரலாம், அரிதானவர்கள் கிடைப்பார்கள்.
சினிமாவுக்கு அடையாளத்தையும் நல்ல இயக்குனர்களையும் கொடுத்த அந்த நிகழ்ச்சியை யாரும் விட்டுவிடக்கூடாது.
இதை ஒரு வேண்டுகோள் மாதிரியே வைக்க ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார்.