கல்கி 2898 AD
இந்திய சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபாஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் திரைப்படம் தான் கல்கி 2898 AD.
இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் முதல் நாளே ரூ. 191.5 கோடி வரை வசூல் செய்திருந்தது.
நான்கு நாட்கள் வசூல்
இந்த நிலையில், இப்படம் வெளிவந்து நான்கு நாட்களை கடந்துள்ளது. அதன்படி, இந்த நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 525 கோடிக்கும் மேல் கல்கி திரைப்படம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு நாட்களில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் சாதனையையும் படைத்துள்ளது கல்கி. நான்கே நாட்களில் ரூ. 500 கோடியை கடந்துள்ள கல்கி, இரண்டாவது வாரத்தின் இறுதிக்குள் ரூ. 1000 கோடியை தொடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.