களனிவெளி மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தொழிநுட்ப கோளாறிற்குள்ளாகியுள்ளது.
குறித்த ரயில் தற்போது கொழும்புக்கு கொண்டு வரப்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.