Monday, December 9, 2024
Homeசினிமாகளைக்கட்ட போகும் ஆயுத பூஜை, விஜயதசம

களைக்கட்ட போகும் ஆயுத பூஜை, விஜயதசம


ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ்.

இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதே நேரத்தில் பண்டிகை தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளின் மூலமாக மக்களை மகிழ்விப்பதிலும் தொலைக்காட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் வரும் அக்டோபர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகியவை கொண்டாடப்பட உள்ளது.

இதனால் இந்த இரண்டு நாட்களும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு திரைப்படங்கள் மூலமாக மக்களை மகிழ்விக்க உள்ளது ஜீ தமிழ்.

இந்த இரண்டு நாளும் என்னவென்ன நிகழ்ச்சிகள் மற்றும் என்னனென்ன சிறப்பு திரைப்படங்கள் ஒளிப்பரப்பாக உள்ளன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.



அதன்படி 11-ம் தேதி காலை 8 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் ” கைபேசி கொடையே கொடுமையே ” என்ற தலைப்பில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சிறப்பு பட்டிமன்றத்துடன் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக தொடங்க உள்ளது.



பட்டிமன்றத்தை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ரத்னம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.



அடுத்ததாக மதியம் 12:30 மணிக்கு கார்த்திகை தீபம் சீரியல் 600 எபிசோடுகளை நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில் கார்த்திகை தீபம் நட்சத்திரங்கள் பங்குபெறும் கார்த்திகை தீபா நட்சத்திர நவராத்திரி ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ளார்.

இதை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றியை பெற்ற ரகு தாத்தா என்ற புத்தம் புதிய திரைப்படம் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக உள்ளது.


விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் 

அக்டோபர் 12-ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 8 மணிக்கு கலைமாமணி சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் ” இல்லறம் சிறக்க இன்றும் காரணம் கணவனே! மனைவியே ! ” என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.



அடுத்ததாக 9:30 மணிக்கு சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற போலோ ஷங்கர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் மதியம் 12:30 மணிக்கு மாஸ் மாமியார் கிளாஸ் மருமகள் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உங்கள் அபிமான மாமியார் மருமகள்கள் ஜோடி சேர்ந்து பங்கேற்று கலக்க உள்ளனர்.

அடுத்து மதியம் 3:30 மணிக்கு விமல், நேஹா, அனிதா சம்பத் என பலர் இணைந்து நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற தெய்வ மச்சான் என்ற சிறப்பு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

எனவே வரும் அக்டோபர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் ஜீ தமிழின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் பூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாட தயாராகுங்கள்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments