Monday, March 17, 2025
Homeசினிமாகவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்.. ஆனால் திடீரென நடந்த மாற்றம்

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்.. ஆனால் திடீரென நடந்த மாற்றம்


கவுதம் மேனன்

இயக்குநர் கவுதம் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இயக்குநராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் பிசியாகிவிட்டார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துவங்கிய இவருடைய நடிப்பு பயணம் தற்போது தளபதி 69 படம் வரை வந்துள்ளது. பல படங்களில் நடித்து வந்தாலும், தன்னை ஒரு நடிகராக என்றுமே கருதவில்லை என அவரே கூறியுள்ளார்.

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான Dominic and the Ladies’ Purse திரைப்படம் இன்று வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவருடைய இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கின்ற திரைப்படம் துருவ நட்சத்திரம்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்.. ஆனால் திடீரென நடந்த மாற்றம் | Rajinikanth Rejected Gautham Menon Movie

தொடர்ந்து சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் மதகஜராஜா திரைப்படம் 13 ஆண்டுகள் கழித்து வெளிவந்து வெற்றியடைந்துள்ள நிலையில், 7 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் துருவ நட்சத்திரம் படமும் விரைவில் வெளிவந்து வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவுதம் மேனன் இயக்கத்தில் ரஜினிகாந்த்

இந்த நிலையில், இயக்குநர் கவுதம் மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் துருவ நட்சத்திரம் படத்தின் கதையை ரஜினிகாந்திடம் கூறியதாகவும், அதற்கு அவர் நாம் இருவரும் இணைந்து இந்த படம் பண்ணலாம் என கூறியதாகவும் பேசியுள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருந்த ரஜினிகாந்த்.. ஆனால் திடீரென நடந்த மாற்றம் | Rajinikanth Rejected Gautham Menon Movie

காலையில் கதை கேட்டுவிட்டு ஓகே என சொன்ன ரஜினிகாந்த், மாலையில் போன் கால் செய்து இப்படத்தை நிராகரித்துவிட்டாராம். யாரோ எதோ சொல்லி இப்படி செய்துவிட்டதாக இயக்குநர் கவுதம் மேனன் அந்த பேட்டியில் பேசியுள்ளார். மேலும் ரஜினிகாந்தின் மனசை களைத்த அந்த நபர் யார் என தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments