காதல் கோட்டை
நடிகர் அஜித்தின் இயல்பான நடிப்பில் அவரது திரைப்பயணத்தில் பெரிய திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் காதல் கோட்டை.
அகத்தியன் அவர்களின் இயக்கத்தில் அஜித்-தேவயானி நடிப்பில் 1996ம் ஆண்டு இப்படம் வெளியாகி இருந்தது. தேவா அவர்களின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் செம ஹிட் தான்.
இப்படத்திற்காக அகத்தியன் அவர்களுக்கு தேசிய விருது எல்லாம் கிடைத்தது. ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமலேயே காதலிக்க முடியும் என அழகான காதல் கதையை எடுத்திருப்பார் இயக்குனர்.
முதல் சாய்ஸ்
இந்த படத்தில் முதலில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அஜித்திற்கு செல்லவில்லை, விஜய்யிடம் தான் சென்றுள்ளது. முதலில் இந்த கதையை அகத்தியன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரரிடம் கூறியுள்ளார்.
கதையை கேட்டுவிட்டு அவர் ஒரு 6 மாதம் காத்திருக்க முடியுமா, இப்போது விஜயால் கால்ஷீட் தர முடியாது என கூறியிருக்கிறார்.
ஆனால் காதல் கோட்டை திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு தள்ளி போட முடியாது என கூறி அடுத்த நாயகனான அஜித்தை தேடி சென்றுள்ளனர்.
அவர் கதையை கேட்டு ஓகே செய்ய அப்படியே படமும் உருவாகியுள்ளது.