ரம்யா பாண்டியன்
ஜோக்கர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியனுக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன் பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.பிக் பாஸுக்கு பிறகு சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் நடித்தார்.
இதையடுத்து மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
உருக்கம்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன், தனது முன்னாள் காதலர் குறித்து பேசினார்,
அதில் அவர், எனக்கு ரொம்பவே பேட் பிரேக்கப் நடந்தது. அதிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியாமல் தவித்து வந்தேன். நான் உடைந்து போய்விட்டேன்.
இதனால் ஒரு கட்டத்தில் ஒல்லியாக மாறிவிட்டேன். இதில் இருந்து என்னுடைய அக்கா தான் மீட்டுக் கொண்டு வந்தார் என ரம்யா பாண்டியன் உருக்கமாக பேசியுள்ளார்.