Thursday, January 16, 2025
Homeசினிமாகாதல், மன அழுத்தம், பிரிய முடிவு... தடைகளை தாண்டி காதலனை திருமணம் செய்த கார்த்திகை தீபம்...

காதல், மன அழுத்தம், பிரிய முடிவு… தடைகளை தாண்டி காதலனை திருமணம் செய்த கார்த்திகை தீபம் சீரியல் நடிகை- அவரே பகிர்ந்த பதிவு


கார்த்திகை தீபம்

தமிழ் சின்னத்திரையில் ஒரு குறிப்பிட்ட நடிகைகள் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறார்கள்.

அதாவது நாயகி என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற காலம் மாறி கருப்பு நிறத்தில் உள்ளவர்கள் நடிக்கலாம், சாதிக்க முடியும் என்பது சின்னத்திரையில் அதிகம் காண்பிக்கப்பட்டு வருகிறது.

சன் தொலைக்காட்சியின் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா ரோஹினி மற்றும் வினுஷா, தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் அர்த்திகா என பலர் சாதிக்கின்றனர்.

தற்போது கார்த்திகை தீபம் சீரியல் புகழ் அர்த்திகா கொடுத்த பேட்டி தான் இப்போது சமூக வலைதளங்ளில் வைரலாக வலம் வருகிறது.

நடிகையின் திருமணம்

அந்த பேட்டியில் நடிகை அர்த்திகா பேசுகையில், நான் சினிமா வருவதற்கு முன் ஒரு கடையில் வேலை பார்த்தேன், அங்கு இவர் அடிக்கடி வருவார், அப்படித்தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது, அப்படியே காதலாகவும் மாறியது.

நான் கிறிஸ்டியன் அவர் இந்து இதனால் எங்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்தது, என் குடும்பத்தில் அவரை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் அவர் குடும்பத்தில் பெரிய பிரச்சனை நடந்தது, இதனால் காதல் வேண்டாம், குடும்பம் தான் முக்கியம் என முடிவு செய்தோம்.

பிரிய முடிவு எடுத்து போன் நம்பரை பிளாக்கில் போட்டோம், அந்த நேரத்தில் அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனை எல்லாம் சென்றார். அதன்பிறகு தான் வீட்டில் பேசி இருவரும் திருமணம் செய்துகொண்டோம் என பேசியுள்ளார். 

காதல், மன அழுத்தம், பிரிய முடிவு... தடைகளை தாண்டி காதலனை திருமணம் செய்த கார்த்திகை தீபம் சீரியல் நடிகை- அவரே பகிர்ந்த பதிவு | Karthigai Deepam Arthika Love Marriage Story

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments