மதுமிதா
தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வெளியான படம் ஒரு கல் ஒரு கண்ணாடி.
இந்த படத்தில் சந்தானம்-உதயநிதி காமெடியை அடுத்து மதுமிதாவின் காமெடி காட்சிகளும் செம ஹிட்டடித்தது.
அப்படத்தின் மூலம் ஜாங்கிரி மதுமிதா என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்ட இவர் தொடர்ந்து நிறைய படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்தார்.
இடையில் மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், ஆனால் சில காரணங்களால் அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். அதன்பிறகு சில படங்களில் மட்டுமே மதுமிதா நடித்து வருகிறார்.
மதுமிதா பேட்டி
சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள போட் படத்தில் நடிகை மதுமிதா ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். அந்த படத்தில் தனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்றும் ரொம்பவே மெனக்கெட்டு நடித்தேன் என்று மதுமிதா கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், நாம் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முக்கியமான விஷயமே அந்த படத்தில் நடித்தால் வரும் சம்பளம் தான்.
ஆனால் சம்பளம் சரியாக கொடுக்க மாட்டார்கள், நாமும் பல வழிகளில் முட்டி மோதி பார்த்து கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க.
கோபப்பட்டு சம்பளம் எப்போ தான் தருவீர்கள் என கேட்டாலும் இவ ரொம் கோபக்காரி, இவளை ஒப்பந்தம் செய்யாதீங்க என மற்ற தயாரிப்பாளர்களுக்கு சொல்லிடுவாங்க.
அந்த பிரச்சனை தான் இப்போது இங்கே நடந்து கொண்டிருக்கிறது என தனக்கு கிடைக்கும் குறைந்த பட வாய்ப்புகள் குறித்து கூறியுள்ளார்.