நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் என்றால் உடனே நியாபகம் வரும் நடிகர்களில் ஒருவர் தான் அஜித்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்குள் நுழைந்து சந்திக்காத பிரச்சனை இல்லை, சர்ச்சைகள் இல்லை.
இப்போது பல தோல்விகள் எல்லாம் சந்தித்தாலும் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் எழுந்து இப்போது கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்.
கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் தயாராகி வருகிறது, ஆனால் இப்படங்களின் ரிலீஸ் குறித்து சரியான அறிவிப்பு இல்லை.
அதிரடி முடிவு
இப்படி ரசிகர்கள் அஜித் அடுத்து என்ன படம் நடிப்பார், எப்போது பட அப்டேட் வரும் என காத்துக் கொண்டிருக்க வேறொரு தகவல் ஒன்று வந்துள்ளது.
அது என்னவென்றால் மீண்டும் கார் ரேஸில் களமிறங்க இருக்கும் அஜித் அதற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
இதனால் சிறிது காலம் அஜித் சினிமாவில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கோரடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் விஜய் மற்றும் அஜித் வெவ்வேறு காரணங்களுக்காக சினிமாவில் ஓய்வு எடுப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம வருத்தத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.