நடிகை ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழி ரோலில் நடித்தவர். படத்தில் காமெடியன் சூரிக்கு ஜோடி அவர்தான்.
ஷாலு ஷம்மு அதற்கு பிறகு படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஷாலுவுக்கு 9 லட்சம் ரசிகர்களுக்கும் மேல் இருக்கிறார்கள்.
மோசடி கால்
சமீபத்தில் தனக்கு வந்த மோசடி கால் பற்றி ஷாலு ஷம்மு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். “காலையில் எனக்கு ஒரு automated குரல் உடன் கிரெடிட் கார்டு பற்றி ஒரு கால் வந்தது. அந்த காலில் ஒரு நம்பரை அழுத்த சொன்னதும் நான் அழுத்தி நான் க்ரெடிட் கார்டில் எந்த விதமான பெரிய பரிவர்தனையும் செய்யவில்லை என கூறினேன்.”
“ஆங்கிலத்தில் பேசிய அந்த வடநாட்டுக்காரர் என்னிடம் கிரெடிட் கார்டு விவரங்களை கேட்ட போது தான் எனக்கு சந்தேகம் வந்தது. அவனை திட்டிவிட்டேன்” என ஷாலு ஷம்மு கூறி இருக்கிறார்.