அஜித் – ஷாலினி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
நடிகர் அஜித் பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். அவ்வப்போது இவர் கால்பந்து விளையாடும் வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாகும்.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றை தனது தாய் ஷாலினியுடன் இணைந்து கண்டுகளித்துள்ளார் ஆத்விக். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..