ஜெனிலியா
தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.
அப்படம் அவருக்கு நல்ல ரீச் கொடுக்க தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நிறைய வெற்றிப்படங்கள் நடித்து வந்தார்.
தமிழில் ஜெனிலியா நடித்த ஹிட் படங்கள் என்றால் சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதையும் வென்றார்.
இதனிடையே பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரியான் மற்றும் ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
சொத்து மதிப்பு
இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ஜெனிலியாவிற்கு அவரது கணவர் ரித்தேஷ் கியூட்டான வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் நடிகை ஜெனிலியாவின் சொத்து மதிப்பு குறித்த ஒரு தகவல் வலம் வருகிறது.
பல மொழிகளில் படங்கள் நடித்து இப்போதும் மக்களால் கொண்டாடப்படும் நடிகை ஜெனிலியாவின் சொத்து மதிப்பு ரூ. 150 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.