லப்பர் பந்து
ரப்பர் பந்து, 15 ரூபாய்க்கு விற்கும்போது தொடங்கும் கதை, 55 ரூபாய்க்கு விற்கும்போது முடிகிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் உணர்ச்சிமிகு சம்பவங்களின் அழகான கதையாக ரப்பர் பந்து அமைந்துள்ளது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாரான இப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகியிருந்தது.
கதையும் அழுத்தமாக இருக்க ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் இந்த படத்தின் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்போது இப்படம் 4 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 6 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.