சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது எப்போது ரோஹினி வீட்டில் சிக்குவார் என்பது தான்.
அதற்கான சூழல் வருவது போல தெரிகிறது, ஆனால் எப்படியோ அதில் இருந்து தப்பித்துவிடுகிறார். அப்படி தனது மகன் கிரிஷ் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு செல்கிறார் ரோஹினி, அங்கு எதிர்ப்பாராத விதமாக முத்து-மீனா வருகிறார்கள்.
இதனால் கிரிஷ் தனது அம்மா பக்கத்தில் இல்லாமல் முத்து-மீனாவுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரோஹினி சிக்கிக்கொள்ள கூடாது என தனது வீட்டில் மறைந்து நிற்கிறார்.
நாளைய புரொமோ
இந்த தொடரின் நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது.
அதில் ரோஹினி தனது அம்மாவிடம் இனி முத்து-மீனா இங்கே வரவே கூடாது, நீ முகம் கொடுத்து பேசாமல் இருந்தால் அவர்கள் வர மாட்டார்கள் என கோபமாக கூறுகிறார்.
அடுத்த ஷாட்டில் மீனா முத்துவிடம் நாம் கிரிஷ்ஷை தத்தெடுத்து வளர்க்கலாமா என கேட்கிறார், காரை ஓட்டிக்கொண்டு வந்த முத்து ஷாக்கில் வண்டியை நிறுத்துகிறார்.
அவர் என்ன சொல்லுவார் என்பதை நாளைய எபிசோடில் காணலாம். இதோ புரொமோ,