Tuesday, February 11, 2025
Homeசினிமாகீர்த்தி சுரேஷுக்கு இரண்டு முறை நடக்கப்போகும் திருமணம்! ஏன் தெரியுமா

கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு முறை நடக்கப்போகும் திருமணம்! ஏன் தெரியுமா


நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பிறகு தமிழ், தெலுங்கில் நடித்து முன்னணி ஹீரோயினாக வளர்ந்தார்.

மகாநடி படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் நுழைந்து இருக்கிறார். அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பு கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது.

2 முறை திருமணம்

கீர்த்தி சுரேஷ் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே ஆண்டனி என்பவரை காதலித்து வருகிறார். 15 வருட காதலுக்கு பிறகு அவர்கள் திருமணம் வரும் டிசம்பர் 12ம் தேதி கோவாவில் நடைபெற இருக்கிறது.

12ம் தேதி காலையில் ஹிந்து முறைப்படி திருமணம் நடக்க இருக்கிறது. அதனை தொடர்ந்து மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்க இருக்கிறது.

இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இரண்டு குடும்ப முறைப்படியும் திருமணம் நடக்க போகிறதாம்.  

கீர்த்தி சுரேஷுக்கு இரண்டு முறை நடக்கப்போகும் திருமணம்! ஏன் தெரியுமா | Keerthy Suresh Antony Wedding Two Times

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments